ரோலர்கோஸ்டரில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த நிலை!
ரோலர்கோஸ்டரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர், தனது இருக்கையிலிருந்து தவறி வீழ்ந்ததால், 26 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனியின் க்ளோட்டன் நகரிலுள்ள உல்லாசப் பூங்காவொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
57 வயதான பெண்ணொரவரே இவ்வாறு உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பெண் எவ்வாறு வீழ்ந்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருவதாக ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றச்செயல்கள் எதுவும் இடம்பெற்றமைக்கான அறிகுறி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி ரோலர்கோஸ்டரையும் அப்பெண் பயணித்த வாகனத்தையும் ஆராய்வதற்கு பொறியியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரோலர்கோஸ்டரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.