இப்போது நமக்குத் தேவை தேர்தல் அல்ல நெதன்யாகு
இஸ்ரேலில் பொதுத் தேர்தலை நடத்துவது ஒரு பெரிய தவறு என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாதீடு மீதான முதல் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் நெதன்யாகுவின் கூட்டணி அரசு, முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் நிச்சயமற்ற ஆதரவை நம்பியே பெரும்பான்மையைச் செலுத்தி வருகிறது.

மிக நீண்ட காலம் பதவியில் இருந்தவர் என்ற சாதனை
மார்ச் 31 ஆம் திகதிக்குள் பாதீட்டை நிறைவேற்றப்படாவிட்டால், தானாகவே முன்கூட்டிய தேர்தல் அறிவிக்கப்படும் . 1996 முதல் பல்வேறு காலகட்டங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலின் பிரதமராகப் பணியாற்றிய நெதன்யாகு, மிக நீண்ட காலம் பதவியில் இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர்.
இந்நிலையில் இஸ்ரேலில் எதிர்வரும் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் போட்டியிடப் போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் தற்போதைய பதவிக்காலம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவதுடன், இவரது சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
ஒக்டோபர் 7, 2023 முதல் நடைபெற்று வரும் காசா போர் கையாளுதல் குறித்து உள்நாட்டில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் "இப்போது நமக்குத் தேவை தேர்தல் அல்ல.
இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலைச் சந்திக்கலாம், ஆனால் தற்போது அதைச் செய்வது தவறானது என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.