இளவரசர் ஹரிக்கும் மகாராணியாருக்கும் இடையில் இருந்த பாசப்பிணைப்பு: பின்னர் ஏற்பட்ட மாற்றம்...
பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜகுடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்று வாழத்துவங்கிய நிலையில், தனது பாட்டியாரான மகாராணியாரை தொலைபேசியில் அழைப்பாராம்.
தன் செல்லப்பேரன் ஹரியின் அழைப்பு வந்தாலே, மகாராணியார் உற்சாகமாகிவிடுவாராம்.
ஆனால், காலப்போக்கில் மகாராணியாரின் உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்கள் அரண்மனை ஊழியர்கள்.
ஹரிக்கும் மகாராணியாருக்கும் இடையிலான உறவு அவ்வளவு நெருக்கமானது. தனது பெரியப்பா ஒரு விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை மணந்ததால் மன்னர் பதவியையே இழந்த வரலாறு தெரிந்திருந்தும், ஹரி மீதான அன்பால் அவர் ஒரு விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை மனைவியாக ராஜகுடும்பத்துக்குள் கொண்டு வர மகாராணியார் அனுமதித்தார் என்றால், அவர் ஹரி மீது எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது நன்கு புரியும்.
JOHN SHELLEY COLLECTION/AVALON/GETTY
ஆனால், ராஜகுடும்பத்தில் ஹரியின் மனைவி மேகனால் ஏற்பட்ட குழப்பங்கள் ஒரு கட்டத்தில் ஹரியும் மேகனும் அரண்மனையை விட்டு மட்டுமல்ல, நாட்டை விட்டே வெளியேறும் நிலையை உருவாக்க, அப்போதும், குடும்பத்தை விட்டுவிட்டு அமெரிக்காவுக்குச் சென்ற தன் செல்லப்பேரன் ஹரியைக் குறித்து ஒரு வார்த்தை தப்பாகச் சொல்லவில்லை மகாராணியார்.
ஆனால், ஹரியும் மேகனும் அமெரிக்கா சென்றபின் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி, மீண்டும் மீண்டும் ராஜகுடும்பம் மீது, குறிப்பாக தன் தந்தை சார்லஸ் மீது ஹரி குற்றச்சாட்டுகள் தெரிவித்தது ஆகிய விடயங்கள் மகாராணியாரின் உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தின.
ADRIAN DENNIS/AFP VIA GETTY
ஆக, ஒரு காலத்தில் ஹரியின் தொலைபேசி அழைப்பு வந்தாலே மகாராணியார் உற்சாகம் காட்டிய நிலையில், பின்னர் ஹரியின் குற்றச்சாட்டுகள் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்கள் அரண்மனை ஊழியர்கள், குறிப்பாக மகாராணியாரின் அலுவலர்கள்.
அவ்வளவு அன்பான பாட்டியாரைப் பிரிந்துவிட்டோம் என்பதை உணர்ந்தாரோ என்னவோ, பாட்டியாரின் இறுதிச்சடங்கில் கண்னீர் வடிய ஹரி நின்ற காட்சியைத்தான் உலகமே பார்த்ததே!
ADRIAN DENNIS/AFP VIA GETTY
ANWAR HUSSEIN/GETTY
PHOTO LIBRARY VIA GETTY
TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY
ANWAR HUSSEIN COLLECTION/WIREIMAGE
JOHN STILLWELL - WPA POOL/GETTY