செங்கடல் பகுதியில் பிரிட்டனின் கப்பலை தாக்கியது யார்?
செங்கடல் பகுதியில் பிரிட்டனிற்கு சொந்தமான கப்பலொன்று தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது செங்கடல் வழியாக பயணித்துக்கொண்டிருந்த கப்பலே தாக்கப்பட்டுள்ளது.
ஹெடெய்டாவிற்கு மேற்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிட்டனின் இராணுவத்தின் கடல்வர்த்தகம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.
கப்பலிற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அந்தபகுதியில் சிறிய கப்பல் ஒன்று காணப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானப்படகுகளையே அமெரிக்கா தாக்கியுள்ளது.
யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் வெடிமருந்து நிரம்பிய ஆளில்லா விமானப்படகுகளை அமெரிக்க படையினர் கண்டுபிடித்தனர் .
கண்டு பிடிக்கப்பட்ட வெடிமருந்து நிரம்பிய ஆளில்லா விமானப்படகு அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும் வர்த்தககப்பல்களிற்கும் உடனடி ஆபத்தாக காணப்பட்டன என அமெரிக்காதெரிவித்துள்ளது.