கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்யக்கூடிய வெளிநாட்டவர்கள் யாவர்?
இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி தொடக்கம் கனடாவில் வெளிநாட்டுப் பிரஜைகள் வீடுகள் கொள்வனவு சய்ய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனேடியர்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்து இந்த சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
எவ்வாறெனினும் ஒரு சிலருக்கு மட்டும் வீடுகள் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக வேர்க் பர்மிட் உடையவர்கள் வீடுகளை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனேடியர்களை வாழ்க்கைத் துணையாக கொண்டவர்கள், இந்திய சட்டம் அல்லது ஏதிலிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களும் வீடுகள் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறி வீடுகள் கொள்வனவு செய்யப்பட்டால் அவ்வாறான கனேடியர் அல்லதவர்களுக்கு அதிகபட்சமாக 10000 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்பதுடன், கொள்வனவு செய்த வீட்டை மீள் விற்பனை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.