வெட்ட வெட்ட முளைக்கும் ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்?
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் திகதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக சின்வார் செயல்பட்டவர் ஆவார். இந்நிலையில் தலைவர்க்ளை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
எனவே ஹமாஸின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்கப்போகிறார் என்பதை அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் ஹமாஸ் வட்டாரங்களில் அடிபடுகின்றன.
அதன்படி, யாஹ்வா சின்வாரின் இளைய சகோதரர் முகமது சின்வார் தலைவர் பட்டியலில் முதலில் உள்ளார். இவர் ஹமாஸ் ஆயுதப்படைப் பிரிவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவராக தற்போது செய்யப்பட்டு வருபவர் ஆவார்.
இவரைத் தவிர்த்து சின்வாரின் வலது கையாக ஹமாஸ் துணைத் தலைவர் செயல்பட்ட கலீல் அல் ஹய்யா பட்டியலில் உள்ளார். கத்தாரில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் சார்பில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியவரும் இவரே.
ஆனால் இவர் வெளியுலகுக்கு அதிகம் தெரிந்தவராகவும் வெளிநாட்டில் உள்ளதாலும் யுத்த களத்தில் இவர் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவர்களை தவிர்த்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த காலெத் மஸீல் தற்போது கத்தாரில் உள்ள நிலையில் அவரும் தேர்வு பட்டியலில் உள்ளார். மேலும் ஹுஸ்மான் பாத்ரான் என்ற உயர்மட்ட தலைவரும் பட்டியலில் உள்ளார்.
யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஹமாஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. போர் முடிவுக்கு வரும் வரை இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே யாஹ்யா சின்வார் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தங்களின் பீரங்கி குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.