தூக்கத்தில் உண்மையை உளறிய மனைவி: கணவர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
இங்கிலாந்து நாட்டில் தான் செய்த குற்றத்தை பெண் ஒருவர் தூக்கத்தில் உளறியதால் கணவர் பிளான் பண்ணி அவரை சிறையில் அடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . சம்பவம் குறித்து தெரியவருகையில்,
வீல் சேர் உதவியோடு இயங்கி வரும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு உதவியாளராக ரூத் ஃபோர்ட் என்ற பெண் பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்தபோது தனது எஜமானிடமிருந்து பணத்தை திருடி உள்ளார்.
எனினும் அதனை ந செலவு செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது குடும்பத்தில் கூட யாரிடமும் அந்த தவறை கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார். இந்நிலையில் , அதைதான் பணிப்பெண் ரூத் தூக்கத்தில் உளறியுள்ளார்.
அதைக்கேட்டு அதிர்ந்த பெண்ணின் கணவர் ஆண்டனி பொலிஸில் புகார் செய்துள்ளார். தான் வேலை செய்யும் இடத்திலிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் 7,31,032 ரூபாயை ரூத் திருடியுள்ளார்.
இதனை தூக்கத்தில் உளறிய போது அறிந்து கொண்டதாக 61 வயது கணவர் ஆண்டனி தெரிவித்துள்ளார். அதோடு தன் மனைவி செய்த குற்ற செயலுக்கு அவர் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கில் புகார் கொடுத்ததாகவும் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனது மனைவி அதிகளவில் பணம் செலவிட்டு வருவதை கண்டு தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரூத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 16 மாத காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
நம்மில் சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி, குறட்டை விடுவது, உளறுவது போன்ற குறைபாடுகள் இருக்கும். இதில் மிகவும் ஆபத்தானது என்றால் அது தூக்கத்தில் உளறுவது தான். ஏனெனில் தூக்கத்தில் உளறும்போது பெரும்பாலும் உண்மையை கூறிவிடுவர் என்பதாலேயே ஆபத்தானதாக கூறப்படுகிறது.
