வேட்பாளர்களுக்கு நன்கொடை வழங்க மாட்டேன்; எலோன் மஸ்க் அதிரடி
உலகப் பெரும் செல்வந்தர் எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப், மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இருவருக்கும் நன்கொடை வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஃபுளோரிடா மாநிலத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த பின்னர் மஸ்க் இவ்வாறு கூறினார். சென்ற வார இறுதியில் டிரம்ப், சில நபர்களுடன் சேர்ந்து மஸ்கை சந்தித்ததாக கூறப்பட்டிருந்தது.
நன்கொடை வழங்கப்போவதில்லை
அதேவேளை அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப், தமது தேர்தல் பிரசாரத்துக்கு பெரிய அளவில் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதை முன்னிட்டு அவர், மஸ்கை சந்தித்தார்.
இந்ந்லையில் , அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இருவருக்கும் நான் நன்கொடை வழங்கப்போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தனக்குச் சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத்தில் மஸ்க் பதிவிட்டார்.
எனினும், அரசியல் ரீதியான மற்ற நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்குவதை அவரின் கருத்துகள் மறுக்கவில்லை. மற்ற பெரும் செல்வந்தர்களைப் போல் மஸ்க், அரசியலில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதில்லை.
கடந்த 2009ஆம் அண்டு முதல் ஒரு மில்லியன் டாலருக்கும் குறைவான தொகையையே அவர் நன்கொடையாக வழங்கியிருப்பதாக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மஸ்க்கின் அறிவிப்பு டரம்ப்புக்குச் சவாலாக அமையக்கூடும். தேர்தல் பிரசாரத்துக்கென அவரிடம் தற்போது 30.4 மில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. அதேவேளை, பைடனிடம் 130 மில்லியன் டாலர் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்படதாக கூறப்படுகின்றது.