பாகிஸ்தான் நடுவராக முனைந்து ஈரான் விஜயம் ; அமெரிக்கா-ஈரான் பதற்றம் தணியுமா?
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆசிய நாடுகளின் எரிசக்தி இருப்பை பலப்படுத்துவதற்காக பாரிய நிதித் திட்டத்தை ஜப்பான் அறிவித்துள்ளது.
ஜப்பானிய பிரதமர் சானே டகாய்ச்சி இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

இதன்படி தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஓராண்டிற்கு இறக்குமதி செய்யும் மசகு எண்ணெய்க்கு இணையான (சுமார் 1.2 பில்லியன் பீப்பாய்கள்) பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி மற்றும் நிப்பான் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு காப்புறுதி ஆகிய அரசு சார்ந்த நிறுவனங்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்படும். ஆசிய நாடுகளின் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்பு, ஜப்பானின் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் கருவிகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், கையுறைகள் மற்றும் குழாய்கள் போன்ற அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு ஜப்பான் ஆசிய நாடுகளையே சார்ந்துள்ளது.
பிளாஸ்டிக் உற்பத்திக்குத் தேவையான 'நெப்தா' போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் இத்திட்டத்தின் மூலம் அமெரிக்க மசகு எண்ணெய் போன்ற மாற்று எரிசக்தி வளங்களைக் கொள்வனவு செய்ய உள்ளூர் நிறுவனங்களுக்குக் கடன் வசதி வழங்குதல்.
பங்காளி நாடுகளில் எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை நிர்மாணிக்க நிதியுதவி செய்தல். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறைந்தளவிலேயே எண்ணெய் இருப்பு உள்ளதால், அதனை அதிகரிக்கச் செய்து விநியோகச் சங்கிலியைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் மசகு எண்ணெயில் சுமார் 90 சதவீதமானது ஆசிய நாடுகளுக்கே கிடைக்கின்றது.
தற்போதைய பதற்றமான சூழலில், ஜப்பான் தனது தேசிய எண்ணெய் இருப்பிலிருந்து மே மாத தொடக்கத்தில் மேலும் 36 மில்லியன் பீப்பாய்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட "AZEC Plus" கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.