மத்திய கிழக்கு மீண்டும் தீப்பிடிக்குமா? புதிய எச்சரிக்கை
லெபனானில் இஸ்ரேல் இழைத்த "குற்றச்செயல்கள்" மற்றும் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியமைக்காக அந்த நாட்டிற்குத் தகுந்த "தண்டனை" வழங்கப்படும் என ஈரானின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல்ஜெஸீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலிலுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையானது பிராந்திய முழுமைக்கும் பொருந்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இஸ்ரேல் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மீறி வருவதாகவும், அத்தகைய தரப்பினரைத் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமே கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானிடமிருந்து வெளியாகியுள்ள இந்த எச்சரிக்கையானது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகின்றது.