கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம் !
கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன் ஹில்ட்பிராண்ட் த்தீசன் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கு கிடைக்கப்பெற்ற இனிப்பு பண்டங்களை வீட்டின் அறையில் பிரித்து வகைப்படுத்திய போது அதில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை குறித்த பெண் அவதானித்துள்ளார்.

யாரோ ஒருவருடைய திருமண மோதிரம் என்பதையும் அவர் ஊகித்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்த மோதிரத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என தான் கருதியதாக பெண் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதியான இந்த மோதிரம் வேறொருவரின் கைகளில் செல்லக்கூடாது என்பதற்காக மிகவும் குறைந்த விபரங்களை உள்ளடக்கி சமூக ஊடகத்தில் மோதிரம் பற்றிய ஒரு பதிவை இட்டுள்ளார்.
முகநூலில் இந்த மோதிரம் பற்றிய பதிவு ஒன்றை குறித்த பெண் இட்டுள்ளார்.
முகநூலில் இந்த பதிவு இடப்பட்டு சில மணித்தியாலங்களில் தங்களது சகோதரரின் மோதிரம் தொலைந்து விட்டதாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாகத குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த மோதிரம் பற்றிய தகவல்களை குறித்த நபர்கள் சரியான அடிப்படையில் வழங்கியதன் காரணமாக மோதிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.