கனடாவில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கனடாவில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
றொரன்டோ மற்றும் றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவுடனான காலநிலை காரணமாக இவ்வாறு வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவினால் வாகன விபத்துச் சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்களில் வாகனத்தில் பயணம் செய்யும் போது முழு அளவில் ஹெட் லைட்களை பயன்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் இன்றைய தினம் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகளவான பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக அதிக இடங்களில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.