அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட கனடியரின் கொலையாளி கைது
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் ஷிபோய்கன் ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கனடியரின் கொலையாளியென சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒன்டாரியோவின் ஸ்டோவ்ஸ்வில்லில் பிறந்த ஜியோவானி மைக்கேல் ராபின்சன் என்ற 32 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சுற்றுலா சென்றிருந்த போது மன்ரோ வீதி அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லூயிஸ் இ. க்ரூஸ் புர்கோஸ் என்ற நபர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷிபோய்கன் ஃபால்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதாகவும் விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.