இது கொடுஞ்செயல், தாங்கமுடியவில்லை... நால்வர் கொலையில் மனம் திறந்த குற்றவாளியின் தந்தை
லண்டனில் இஸ்லாமியர்கள் நால்வர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான குற்றவாளியின் தந்தை முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
கனடாவை உலுக்கிய இஸ்லாமியர் கொலை தொடர்பில், கைதான இளைஞரின் தந்தை Mark Veltman வெளிப்படையாக பேசியுள்ளார்.
வியாழக்கிழமை அறிக்கை வாயிலாக தமது கருத்தை வெளியிட்ட Mark Veltman, நடந்த சம்பவங்களை தம்மால் ஏற்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது கொடுஞ்செயல் என குறிப்பிட்டுள்ள அவர், தகவல் அறிந்த பின்னர் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் தம்மால் அடக்க முடியவில்லை என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதால் தம்மால் மேலதிகமாக எந்த கருத்தையும் வெளியிட முடியாத சூழல் என அந்த அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனிடையே கைதாகியுள்ள Nathaniel Veltman மீது பயங்கரவாதம் தொடர்பிலான கடுமையான வழக்குகள் பதியப்படுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.