கனடாவில் குழந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட பெண்; பொலிஸார் அதிரடி
கனடாவில் மாடியிலிருந்து குழந்தையொன்றை தள்ளிவிட்ட பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
டொரண்டோ நகர மையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் பல்கனியில் இருந்து ஒரு சிறிய குழந்தையை தள்ளியதாகக் கூறப்படும் 33 வயதுடைய பெண் ஒருவர் கொலைமுயற்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை பொலிஸார் சுமத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை காலை ப்ரொன்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் Front Street West மற்றும் ஸ்பாடினா அவன்யூ Spadina Avenue அருகே உள்ள ஒரு கான்டோ கட்டிடத்துக்கு அருகே தரையில் விழுந்த நிலையில் குழந்தை கிடப்பதாக பொலிஸாருக்கு அவசர அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தை பல்கனியில் இருந்து தள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் குழந்தை கடுமையாக காயமடைந்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு குறித்த பெண்ணை, பொலிஸார் கைது செய்தனர். கொலைமுயற்சி தவிர, கடுமையான தாக்குதல், உயிருக்கு ஆபத்தான பதார்த்தம் கொடுத்தல், என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பெண்ணின் பெயர் போலீசாரால் வெளியிடப்படவில்லை. மேலும், குழந்தையுடனான உறவுமுறை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.