கனடாவில் இடம்பெற்ற வினோத சம்பவம்
கனடாவின் வின்னிபெக்கில் பெண் ஒருவர் அணிந்திருந்த பொய்முடி அல்லது விக்கிற்கு தீ மூட்டிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு 40 வயது பெண் ஒருவரே இவ்வாறு முன்பின் அறிமுகமில்லா 50 வயது பெண்ணைத் தாக்கி, அவர் அணிந்திருந்த பொய் முடிக்கு தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியோரத்தில் நடந்துகொண்டிருந்த 50 வயது பெண்ணை, 40 வயது பெண் ஒருவர் அணுகி வாய்த்தகராற்றில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்கும் முன்பே எந்தத் தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதம் அதிகரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பொய் முடிக்கு தீ வைத்தார். அதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக விக்கை அகற்றியதால் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பெண் பின்னர் திரும்பி வந்து, அந்தப் பெண்ணை உடல் ரீதியாக தாக்கி சிறிய காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் உடனே அங்கிருந்து தப்பித்து காவல்துறையினரிடம் புகார் செய்தார்.
விரைவில் செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.