லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக கனேடியர்களை ஏமாற்றிய பெண் கைது
கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபாவில் வாழும் முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றும் இளம்பெண் ஒருவர் சிக்கியுள்ளார்.
2022 ஆகத்து துவங்கி, ஆறு மாதங்களுக்கு கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபாவில் வாழும் முதியவர்களைக் குறிவைத்து பெண் ஒருவர் மோசடி ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.
Welland Tribune
அந்த முதியவர்களை தொலைபேசியில் அழைக்கும் அந்தப் பெண், அவர்களுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறுவார். மகிழ்ச்சியடையும் அவர்களிடம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு சிறு தொகையைக் கட்டணமாக செலுத்தவேண்டியிருக்கும் என்று கூறுவார் அவர்.
எப்படியும் லொட்டரியில் பரிசு விழுந்த தொகை கிடைக்குமே என்று நம்பி அந்த முதியவர்களும் அந்தப் பெண் கேட்கும் தொகையை அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான், லொட்டரியில் பரிசு விழுந்ததாக கூறப்படும் பணமும் கிடைக்காது, கட்டிய பணமும் போய்விடும்.
The Toronto Star
இப்படியே ஆறு மாதங்களாக மோசடி செய்து வந்தவர் தற்போது சிக்கியுள்ளார். அவர் ரொரன்றோவைச் சேர்ந்த Abigail Aseani Lindsay (27) என்னும் பெண் ஆவார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 50,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை அவர் பலரை ஏமாற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஜூலை மாதம் 31ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |