கனடாவில், ஆள் மாறாட்டம் செய்த பெண்ணுக்கு எதிராக வழக்கு
கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள வயோதிபர் பராமரிப்பு நிலையங்களில் வேலை பெற மற்றொருவரின் தாதியர் சான்றுகளை பயன்படுத்தி பணியில் சேர்ந்ததாக கூறப்படும் 31 வயது பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஆன் நுவேன் (Anh Nguyen) என அடையாளம் காணப்பட்ட இந்தப் பெண், 2020 ஜூன் முதல் 2024 ஜூன் வரையிலான காலப்பகுதியில், டொரோண்டோ பெரும்பாக பகுதிகளில் உள்ள பல பராமரிப்பு நிலையங்களில் வேலை பார்த்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பெண் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காக, பல போலி ஆவணங்களை தயார் செய்துள்ளார், மற்றொருவரின் தாதியர் சான்றிதழ்களை தன்னுடையதாகக் காட்சிப்படுத்தி நன்மை பெற்றுள்ளார் என போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2 விவகாரங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தியமை, விவகாரங்களில் மற்றொருவரைப் போல நடித்து நன்மை பெற்றது என இந்தப் பெண் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
டொரோண்டோ போலீசார், நுவேனின் புகைப்படத்தை வெளியிட்டு,
அவர் மேலும் பல இடங்களில் பொய்யான அடையாளத்துடன் வேலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.