கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட பெண் விழுந்து மரணம்
கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் அமைந்துள்ள ராக்கி மலை பகுதிகளில், பனிச்சறுக்கச் சென்ற 34 வயதுடைய பெண் ஒருவர், “மிகுந்த உயரத்திலிருந்து” கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த துயரமான சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மொரெயின் ஏரி (Moraine Lake) அருகே இடம்பெற்றுள்ளது.
லேக் லூய்ஸ் ஆர்சிஎம்பி (Lake Louise RCMP) பொலிஸாரின் செய்திக் குறிப்பின் படி, விபத்துக்குள்ளான பெண் லேக் லூயிஸைச் சேர்ந்தவராக உள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து பாதிக்கப்பட்டவரை மீட்க, ஆல்பைன் ஹெலிகாப்டர்கள் (Alpine Helicopters) மூலம் லாங்லைன் (longline) முறையில் தூக்கி எடுத்தனர்.
எஸ்டிஏஆர்எஸ் (STARS) அவசர மருத்துவ குழுவும் நிகழ்விடம் விரைந்தது.
ஆனால் அவரை மீட்டபோதும், மருத்துவப் பரிசோதனையின் பின்னர், அந்த பெண் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
மொரெயின் ஏரி, லேக் லூயிஸுக்கு தெற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.