அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி பெண் உயிரிழப்பு
அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸில் கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சுறா தாக்கப்பட்டத்தில் மற்றுமோர் ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
20 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், 20 வயதான மற்றைய நபர் ஆபத்தான நிலையில் நியூகேஸில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (27) அதிகாலை, உள்ளூர் நேரப்படிசிட்னியில் இருந்து சுமார் 300 கி.மீ வடக்கே உள்ள க்ரௌடி பே தேசிய பூங்காவில் உள்ள கைலீஸ் கடற்கரைப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதேவேளை இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஐந்தாவது கொடிய சுறா தாக்குதல் இதுவாகும். இதில் மிக அண்மையது மூன்று மாதங்களுக்கு முன்பு, சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் ஒரு அரிய சுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தமை ஆகும்.