அர்ஜென்டினா வைத்தியர்களை ஆச்சரியப்பட வைத்த எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட பெண்
அர்ஜென்டினாவில் HIV நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தானாக குணமடைந்த சம்பவம் வைத்திய குழுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரையில் எந்த நாட்டிலும் HIV நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இந்த நிகழ்வானது உலகம் முழுவதும் பெரும் அதிசய நிகழ்வாக இடப்பெற்றுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு HIV நோயால் பாதிக்கப்பட்ட 66 வயது பெண் ஒருவரே இவ்வாறு எந்த சிகிச்சையும் இன்றி HIV நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய Mathias Litzerfield மற்றும் Harvard கூறுகையில், அவர் HIV நோயில் இருந்து முழுமையாக குணமானது எங்களுக்கே ஆச்சரியமாக தான் உள்ளது. முதலில் அவரது உடலில் இருந்து 1.2 பில்லியன் செல்களை எடுத்து ஆராய்ந்தோம். ஆனால் அவரிடம் HIV நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
குழந்தைக்கு எதாவது பாதிப்பு இருக்கிறதா? என்று அவரது தொப்புள் கொடி மூலம் நடத்தினோம். பல சோதனைகளின் இறுதியில் அவருக்கு HIV பாதிப்பு இருந்ததற்கான அடையாளமே இல்லை. இவருக்கு முன்பு இதே போல் ஒருவர் மட்டுமே இப்படி குணமாகியுள்ளார்.
பொதுவாக HIV நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நோயினை குணப்படுத்த முடியாது மாறாக அவர்களுக்கு சிகிச்சை வழங்கி சில ஆண்டு நீடித்து வாழ வைக்க முடியும்.
இவ்வாறான சூழலில் HIV நோயால் இந்த பெண் குணமடைந்துள்ள சம்பவம் அதிசய தக்க நிகழ்வாக இடம்பெற்றுள்ளது.