கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கணவனை கடத்த முயற்சித்த பெண்
கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு தனது கணவனை கடத்த முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் ஊடாக குறித்த பெண் தனது கணவரை கடத்த முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
53 வயதான ட்ராசி ரூத் லாடுன்ஸ்லாகர் என்ற பெண் மீத இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் ஓர் பிரித்தானிய பிரஜை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுக நகரமொன்றின் வாயிலாக குறித்த பெண் தனது கணவரை கடத்த முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்கு எதிராக சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான வகையில் கணவரை அமெரிக்காவிற்குள் கொண்டு செல்ல முயற்சித்ததனை குறித்த பெண் ஒப்புக் கொண்டுள்ளார்.