பிரான்ஸ் பாரீசில் வீதியில் வைத்து பெண் பாலியல் வல்லுறவு
பிரான்ஸ் பாரீசில் இரவு விருந்து ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் ஒருவர், வீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Parc de la Villette பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
31 வயதுடைய பெண் ஒருவர் அங்குள்ள Trabendo அரங்கில் விருந்து ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு பங்கேற்றபின்னர் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
அதன்போது வீதியில் வைத்து அவரை நபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி, தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதனால் அவர் சுயநினைவிழந்து மயங்கினார்.
பின்னர் சில நிமிடங்களில் குறித்த அங்கிருந்து தப்பி ஓடியதன் பின்னர், பெண் மயக்கம் தெளிந்து எழுந்து அருகில் உள்ள Cabaret Sauvage பகுதிக்கு வந்து காவல்துறையினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த நிலையில் சந்தேக நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.