காரில் எண்ணெய் மாற்றுவதற்கு காத்திருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
கார் ஒன்றில் எண்ணெய் மாற்றுவதற்காக காரின் முன்பகுதியை திறந்த போது பெண் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
காரின் என்ஜின் உள்ளிட்ட பகுதிகள் காணப்படும் முன்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான அணில் கூடுகள் காணப்படுவதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
றொரன்டோவைச் சேர்ந்த ஷஹானா மிர்ஷா என்ற பெண்ணின் காரில் இவ்வாறு அணில் கூடு கட்டியுள்ளது.
நோர்த் யோர்க்கில் தனது பெற்றோரின் வீட்டுக்கு அருகாமையில் இந்த கார் சில மாதங்கள் தரித்து நின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது’.
குறித்த பெண்ணுக்கு பிரசவம் என்பதனால் கார் அதே இடத்தில் காணப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் அசாதாரணமாக அசைவதனை அவதானித்து எண்ணெய் ஊற்றுவதற்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காரின் என்ஸினுக்கு எண்ணெய் ஊற்றச் சென்ற போது, காரில் அணில் கூடு கட்டியிருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனது வாழ்நாளில் இவ்வாறான ஓர் சம்பவத்தை எதிர்நோக்கியது கிடையாது என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த அணி கூடுகளை அகற்றவும், இயந்திரங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை சரி செய்யவும் சுமார் ஆயிரம் டொலர்கள் செலவிட நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.