லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் வென்ற பெண்: ஐந்து முறை இலக்கங்களை சரி பார்த்துள்ளார்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கேனல் பிளாட்ஸ் பகுதியில் வசிக்கும் டீனா மக்க்ளெல்லாண்ட் (Deana McClelland) ஒரு மில்லியன் லொத்தர் பரிசு வென்றுள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் வென்றதை அறிந்த தருணத்தில் அவர் அதிர்ச்சியடைந்ததோடு, நம்ப முடியாமல் ஐந்து முறை தொடர்ந்து டிக்கெட்டை சரிபார்த்ததாக தெரிவித்துள்ளார்.
டீனா, அந்த டிக்கெட்டை அர்பகிள் வீதியிலுள்ள பெமிலி புட்ஸ் கடையில் கொள்வனவு செய்துள்ளார்.
அதிர்ஸ்டத்தை நம்பவில்லை
லொத்தர் செயலியில் டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது வெற்றி தொகை திரையில் தோன்றியது. ஆனால், “செயலியில் பிழை வந்திருக்க வேண்டும்” என்று முதலில் எண்ணியதாக தெரிவித்துள்ளார்.
“நான் பலமுறை மீண்டும் சரிபார்த்தேன். என் கணவரிடம் கூட அவரது அலைபேசியில் பார்க்கச் சொன்னேன். பிறகு என் அலைபேசியை ஆஃப் செய்து மீண்டும் ஓன் செய்து பார்த்தேன். இறுதியாக கடைக்கு சென்று உறுதி செய்த பிறகுதான் நம்ப முடிந்தது,” என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
வெற்றியை உறுதிப்படுத்திய பிறகு, தம்பதியினர் தங்கள் மகனுக்கு இதனைத் தெரிவித்துள்ளனர். பணியில் ஈடுபட்டிருந்த மகன் இந்த அதிர்ஸ்டத்தை நம்பவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தாலும், அந்த தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து டீனா இன்னும் முடிவு செய்யவில்லை.
“இப்போதும் எனக்கு மயக்கம் மாதிரி தான் இருக்கிறது. நம்ப முடியாத அதிர்ச்சி, ஆச்சரியம்,” என அவர் தெரிவித்துள்ளார்.