கனடாவில் ஒரே இடத்தில் இரு ரயில் விபத்துக்கள்: 2 பேர் பலி
மிஸ்ஸிசாகுவாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனேடிய பசுபிக் ரயில் சேவையின் சரக்கு ரயில் ஒன்றில் இந்தப் பெண் மோதுண்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 4 வயதான சிறுமியொருவர் மோதுண்ட அதே இடத்தில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டுன்டா வீதி கிழக்கு மற்றும் கவ்த்ரா அவன்யூவில் காலை 6.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜுலை மாத இறுதி வாரத்தில் இந்த இடத்திலேயே ரயிலில் மோதுண்டு நான்கு வயது சிறுமி உயிரிழந்திருந்தார்.
பாதுகாப்பற்ற வகையில் குறித்த பகுதியில் ரயில் பாதை காணப்படுவதாகவும், பாதுகாப்பு வேலிகள் இல்லாத காரணத்தினால் சிறுமி உயிரிழந்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மெட்ரோலிங்க்ஸ் நிறுவனம் இந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலிகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் விபத்துச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.