கனடாவில் கத்தி குத்துக்கு இலக்கான பெண் படுகாயம்
மிசிசாகா நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பீல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில், எக்லிங்டன் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஹூரொன்டாரியோ ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக அவசர சேவை குழுக்கள் தகவல் பெற்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், மருத்துவ ஊழியர்களும், படுகாயமடைந்திருந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடக்கும் முன் இந்த பெண்ணும், ஒரு ஆணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த ஆண் சந்தேகநபராகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த நபர் தப்பிக் சென்றுள்ளார்.
சந்தேகநபரின் விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. சுற்றுப்புற கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) வழியாக அவர் தொடர்பான தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பீல் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.