லொத்தர் சீட்டு கொள்வனவு செய்ய முயற்சித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்த போது மற்றும் ஒரு லொத்தர் சீட்டில் பரிசு வென்றமை தெரிய வந்துள்ளது.
புதிதாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யும் நோக்கில் தனது லொத்தர் சீட்டுக் கணக்கிற்குள் பிரவேசித்த (Log) ஆகிய போது பரிசுத்தொகை வென்றமை குறித்த அறிவுறுத்தலை குறித்த பெண் பார்வையிட்டுள்ளர்.
இதனை பார்த்ததும் தாம் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேய் ஜியாங் என்ற ரிச்மண்ட்ஹில்லைச் சேர்ந்த பெண் இவ்வாறு லொத்தர் சீட்டிலில் பரிசு வென்றுள்ளார்.
லொட்டோ 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் இந்தப் பெண் இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 199 டாலர்கள் பரிசாக வென்றுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த பெண் பரிசு வென்றுள்ளார்.
பெற்றுக்கொண்ட கடனை செலுத்த உள்ளதாகவும் தமக்கும் தமது கணவருக்கும் புதிய அலைபேசிகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசுத்தொகை வென்றெடுக்கப்பட்டமை பெரு மகிழ்ச்சியை அளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.