சவப்பெட்டியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் மரணம்!
ஈக்குவடோரில் சவ பெட்டியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ,மனை அறிவித்ததை அடுத்து இறுகிரியைக்கான ஏற்பட்டுகள் மேற்கொள்ளப்பட்டபோது அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் , பாபாஹோயோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன்பின் அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் , ஸ்டிரோக் பாதிப்பு ஏற்பட்டு கடந்த வெள்ளி கிழமை உயிரிழந்துள்ளார்.
இதனை மண்டல சுகாதார துறை தெரிவித்து உள்ளது. அதேவேளை பெல்லா உயிரிழந்து விட்டார் என முதன்முறை எப்படி தவறுதலாக அறிவிக்கப்பட்டது என்பது பற்றி சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.