கனடிய பெண்களிடம் செய்யப்பட்ட நூதன மோசடி
கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நூதன முறையில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண்கள், பெருந்தொகை பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பெண் 62000 டொலர்களையும் மற்றைய பெண் 14000 டொலர்களையும் இழந்துள்ளனர்.
இந்த இரண்டு பெண்களும் இணைய வழியில் காதல் வலையில் வீழ்ந்து ஏமாற்றமடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் கப்பல் ஒன்றின் மாலுமி என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் தம்மை ஏமாற்றியதாக ராமா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
முகநூல் வழியாக ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் தாம் நெருங்கி பழகியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் அந்தப் பெண்ணுக்கு பல்வேறு பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் அனுப்பிய பரிசு பொருட்கள் கனடிய எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வரி, தரகு மற்றும் காப்புறுதி கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக 6200 டொலர்களை செலுத்துமாறும் தாம் அதனை திரும்பி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபரின் வார்த்தைகளை நம்பிய, ராமா என்ற பெண் 62000 டொலர்களை செலுத்தியுள்ளார்.
எனினும் பின்னர் இந்த அனைத்து செயல்களும் மோசடி என்பது தெரியவந்துள்ளது.
தனது வாழ்நாள் சேமிப்பு தொகையையும் கடனாக பெற்றுக்கொண்ட தொகையையும் இவ்வாறு செலுத்தியதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
மற்றும் ஒரு பெண்ணும் இவ்வாறு இணைய வழியில் தொடர்பு பேணி 14000 டொலர்களை இழந்துள்ளார்.
இணைய வழி டேட்டிங் இணையதளம் ஒன்றின் ஊடாக குறித்த நபர் தம்மை தொடர்பு கொண்டதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
குறித்த நபரை இரண்டு தடவைகள் நேரில் சந்தித்துள்ளதாகவும், தாம் தனியார் ஜெட்டில் பயணிப்பதாகவும், பாரிய நிதி நிறுவனமொன்றை முகாமை செய்வதாகவும் குறித்த நபர் கூறியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்தப் பெண் நூதமான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது.
முதலீட்டு நடவடிக்கை ஒன்றிற்காக பணம் வழங்குமாறு கோரி இந்த பணத்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இவ்வாறான காதல் தொடர்புகள் ஊடான மோசடிகளில் சிக்கி 1790 பேர் பணத்தை இழந்துள்ளனர்.
மொத்தமாக 52477512 டொலர்களை இவ்வாறு மக்கள் இழந்துள்ளனர்.