பிரான்ஸில் பெண்கள் கும்பலால் ஆபத்து; மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பெண்கள் தலைமையிலான கும்பல் ஒன்று இயங்கி வருகின்றது.
இது ஒரு கொள்ளை கும்பல் எனவும் இந்த கும்பலில் உள்ள பெண்கள் அச்சுறுத்தி வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இந்த கும்பலை சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த குழுவினரிடம் திருடி குறித்த பெண்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துளளனர். அந்த குழுவிடம் குறித்த இரண்டு பெண்களும் 1400 யூரோக்கள் திருடிச் சென்றுள்ளனதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் சில நிமிடங்களிலேயே இரண்டு பெண்களும் பாரிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தையடுத்து பாரிஸில் ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து பணத்தை திருடிய பின்னர் இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர், இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பெண்களுடன் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சில பெண்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் பெண்கள் என்பதனால் மக்கள் பெரிய அளவில் சந்தேகமடைவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பெண்கள் மிகவும் நுட்பமான முறையில் பொது மக்களிடம் கொள்ளையிட்டு செல்வதாக தெரியவந்துள்ளது. இதனால் பாரிஸின ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் பயணிகள் பலரும் தங்கள் பைகளை கொள்ளையர்களிடம் பறிக் கொடுத்துள்ளனர்.
அதற்கமைய, சந்தேக நபர்களான இரண்டு பெண்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களுடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.