ஒன்றாரியோவில் வைத்தியசாலைகள் தனியார் மயப்படுத்தப்படுமா?
ஒன்றாரியோ மாகாண வைத்தியசாலைகளில் தனியார் மயப்படுத்தப்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மாகாணத்தில் வைத்தியசாலைகளில் பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமங்கள் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சுகாதார கட்டமைப்பு தனியார்மயப்படுத்தப்படக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என மாகாண சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான வழிகளிலும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாதியருக்கான தட்டுப்பாடு காரணமாக பல சந்தர்ப்பங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
பொதுச் சுகாதார முறைமை மாகாணத்தில் காணப்படுவதாகவும் அதனையே தொடர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனியார்மயப்படுத்தல்களை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.