கூரையிலிருந்து தவறி விழுந்த பணியாளர் பலி
கனடாவின் இட்டாபிகொக் பகுதியில் கூரையிலிருந்து தவறி விழுந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பணியிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தொழில் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இட்டாபிகொக்கின் ரத்பர்ன் மற்றும் கிப்லிங் வீதிகளுக்கு அருகமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரையிலிருந்து 15 அடி கீழே வீழ்ந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார். விழுந்து படுகாயமடைந்த பணியாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் கவலையளிப்பதாகவும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகவும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.