அதற்கு உலகம் இன்னும் தயாராகவில்லை: செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை
அடுத்து ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் இன்னமும் தயாராகவில்லை என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை தொடர்பான பேரழிவுகளுடன் எதிர்கால சுகாதார நெருக்கடிகள் கடும் சிக்கலை ஏற்படுத்தலாம் எனவும் செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் கொடூரமான மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் உறுதியான தயார் நிலையை காணமுடியவில்லை எனவும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், நம்பிக்கையை கட்டியெழுப்புதல், பகிர்தல் மற்றும் உள்ளூர் நடவடிக்கை கூட்டமைப்புகள் உள்ளிட்டவை அடுத்த நெருக்கடியை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
2019 காலகட்டத்தில் உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றை எவ்வாறு எதிர்கொண்டனவோ அதே நிலையில் தான் தற்போதும் உலக நாடுகள் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளது செஞ்சிலுவை சங்கம்.
கடுமையான காலநிலை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதுடன், உக்கிரமாகவும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள செஞ்சிலுவை சங்கம்,
அடுத்த பெருந்தொற்று எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் எனவும், நாம் இதுவரை தயாராகவில்லை என்பது உண்மை என சுட்டிக்காட்டியுள்ளது.