மறைந்த ராணிக்கு உலகெங்கும் மக்கள் மரியாதை (Photos)
பிரிட்டனின் ராணியால் எலிசபெத் மகாராணி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். காலஞ்சென்ற 96 வயது எலிசபெத் அரசியார், பிரிட்டனில் ஆக நீண்டகாலம் ஆட்சி புரிந்தவர் ஆவார் .
இந்நிலையில் 70 ஆண்டுகள் ஆட்சிசெய்த அவருக்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் , மற்றும் நாடுகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்ட Empire State கட்டடம். சமுதாயத்தில் உயர் பதவியில் உள்ளோரைச் சித்திரிக்க ஊதா நிறம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
அந்தவகையில் டெல் அவிவ் (Tel Aviv) நகரில் நகராண்மை நிர்வாகக் கட்டடம் ஒளியூட்டப்பட்ட நிலையில் ஜேர்மன் நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அதேசமயம் சிட்னியில் அரசியாருக்கு மரியாதை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.