இந்தியா தொடர்பில் உலகின் முன்னணி பத்திரிகைகள் காட்டம்

covid india newspapers
By Sulokshi Apr 23, 2021 08:20 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று இன்று ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட துவங்கி கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருக்கும் வேளையில், பல நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் இந்தியாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவது உலக நாடுகளை திடுக்கிட வைத்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட முன்னணி நாடுகள் இந்தியாவிற்கான விமான சேவையை நிறுத்திவைத்திருப்பதோடு இந்தியா செல்ல வேண்டாம் என தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியாவின் பாதிப்பு மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து உலகின் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த பாதிப்புக்கு மோடி அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று வெகுவாக குற்றம் சுமத்தியுள்ளன.

அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில நாளிதழான 'தி கார்டியன்' - 'நிர்வாகம் சீரழிந்து விட்டது : கொரோனா நரகத்தில் இந்தியர்கள்' என்ற தலைப்பில் 21-ஏப்ரல்-2021 அன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் 'எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு கூட்டத்தை எனது தேர்தல் பிரச்சாரத்தில் பார்த்ததில்லை' என்று மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சில் இருந்து தொடங்கும் இந்த கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ்-கள் சாரை சாரையாக வரிசை கட்டி நிற்க, பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாவான அமித் ஷா வும் மேற்கு வங்க தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர் என குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், கூட்டம் சேரவேண்டாம், தனி மனித இடைவெளி வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக கூட்டம் சேர்பதிலேயே கவனமாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதே நாட்டை சேர்ந்த 'டெய்லி மெயில்' - நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் உயிரிழந்த சம்பவத்தை பதிவிட்டுள்ளது.

அதோடு கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக போலீசார் ஒருபுறம் மக்களை தடியடி நடத்துவதும், மறுபுறம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுவதையும் விளக்கியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் இதழ் சிறப்பு செய்தி பிரிவில் பொருளாதார மற்றும் தொற்றுநோய் குறித்த விவகாரங்கள் குறித்த ஆய்வாளரான ரமணன் லஷ்மிநாராயணன் என்பவரது கட்டுரையை 'இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது' என்ற தலைப்பில் பதிவிட்டுருக்கிறார்.

கும்பமேளா கொண்டாட்டம், திரளான தேர்தல் திருவிழா ஆகியவற்றை குறித்து பதிவிட்டிருக்கும் அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆங்காங்கே பிணங்களை எரிக்கும் சம்பவத்தை 1984 ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு விபத்துடன் ஒப்பிட்டிருக்கிறார். அத்துடன் அரசு திட்டமிட தவறியதும் ஆயத்தமாகாததும் தான் இத்தனை பெரிய பாதிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் உலகின் தினசரி கொரோனா தொற்றில் 40 சதவீதம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது. லே மோண்ட் எனும் பிரெஞ்சு நாளிதழில் நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு குறித்து பதிவிட்டுருப்பதோடு, இதுபோன்ற ஒரு நிலையை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றில் முன்னணியில் இருக்கும் மற்றொரு நாடான பிரேசில் நாளிதழான ஓ க்ளோபா இந்தியாவில் பரவி வரும் புது விதமான கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டுள்ளது. ஜப்பான் டைம்ஸ் நாளிதழும் இங்கு நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா-வின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில், இந்தியாவில் நடந்த கும்பமேளா, தேர்தல் பிரச்சார கூட்டங்கள், மோடி அரசின் முன்னுக்கு பின்னான அறிவிப்புகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள ஊரடங்கு உத்தரவுகள் குறித்து விளக்கமாக பதிவிட்டிருப்பதுடன், இந்தியா செல்லவும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களை தனிமை படுத்தவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பதையும் பதிவிட்டுள்ளது.

கல்ஃப் டைம்ஸ் நாளிதழில் இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் தொட்டிருப்பதை கூறியிருப்பதோடு, ஓமான் அரசு இந்தியா செல்ல விதித்திருக்கும் தடை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளது.   

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US