கிராண்ட் செஸ் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி
கிராண்ட் செஸ் தொடரின் அரைஇறுதியின் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் உடன் நடந்த இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 55-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

அமெரிக்க வீரர்களான பேபியானோ கருணா-வெஸ்லி சோ இடையிலான அரைஇறுதியின் 2-வது ஆட்டம் 50வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
கிளாசிக்கல் ஆட்டம் முடிவில் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையுடன் இறுதிப்போட்டியை நெருங்கியுள்ளார். கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது.
இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரை இறுதியில் மோதுகிறார்கள்.
ஒவ்வொரு அரைஇறுதியும் 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். மொத்தம் 28 புள்ளிகள் கொண்ட அரைஇறுதியில் 15 புள்ளிகள் எடுப்பவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்.