கொரோனாவில் உயிர் பிழைத்த உலகின் மிகவும் வயதான பெண் மரணம்!
உலகின் வயதான பெண்ணாக அறியப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவரின் வயது 118. லூசிலின் மறைவை அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் டேவிட் டவெலா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை எய்தவே விரும்பினார்.
மரணத்தின் மூலம் தனது சகோதரருடன் சேர வேண்டும் என்று விரும்பினார். லூசிலுக்கு நிச்சயமாக இது விடுதலை தான்" என்றார்.
இவ்வாறான நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. லூசில் மறைவுக்கு பிரான்ஸ் மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.