உலகின் மிக உயரமான மரத்தின் அருகில் சென்றால் தண்டனை என்ன தெரியுமா?
உலகின் மிக உயரமான மரத்தின் அருகாமையில் செல்வோருக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் உயரமான மரம் கலிபோர்னியாவின் ரெட்வுட் தேசிய பூங்காவில் காணப்படுகின்றது.
இந்த மரத்திற்கு அருகாமையில் சென்றால் 5000 டொலர்கள் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹைபிரியோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த மரமானது 115.92 மீற்றர் அல்லது 380 அடி உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மரம் பூங்காவின் உள் பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் உயிருடன் காணப்படும் மிக உயர்ந்த மரம் என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த மரம் படைத்துள்ளது.
இந்த மரம் பற்றி பயணக் கட்டுரை எழுதுவோர், யூடியுப்பர்கள் மற்றும் இணைய தள எழுத்தாளர்கள் போன்றோர் சிரமங்களைத் தாண்டி மரத்தின் அருகாமையில் சென்று தகவல்களை திரட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதிகளவான சன நடமாட்டம் காரணமாக மரத்திற்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் குறித்த மரத்திற்கு அருகாமையில் செல்வோருக்கு கடுமையான தண்டனை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மனித நடமாட்டத்தைப் போன்றே காட்டுத் தீ காரணமாகவும் இந்த மரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.