கனடாவில் வீட்டு விற்பனையில் பாரிய பின்னடைவு
கனடாவில் வீட்டு விற்பனையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வீட்டு விற்பனை 37.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வீட்டு விற்பனை 3 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அடகு வட்டி வீத அதிகரிப்பு காரணமாக கனடாவில் வீடு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டிலும் இவ்வாறு வீடு விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததனை அவதானிக்க முடிகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஜனவரி மாதம் சராசரி வீட்டு விலை 18.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் கடனாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 612204 டொலர்கள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.