மர்மமான முறையில் மரணித்துள்ள இளம் குடும்பப் பெண்!
கொழும்பு - கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிடிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடினை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண் தனது குழந்தை, கணவரின் தாய் மற்றும் தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்
மேலும், சடலமாக மீட்கப்பட்ட பெண் 35 வயதுடையவர் எனவும் அவரின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.