யாழில் மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்
யாழில் மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகி உள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த அந் நபர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளிநொச்சியில் இருந்து மூவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்ற மோதல்
இந்நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற மது விருந்தில் எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் கிளிநொச்சியில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான அந் நபர் திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இருவரை கைது செய்துள்ளனர்.