குளத்தில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞன்!
வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கார்மென் தோட்டப் பகுதியில் உள்ள பாரிய குளம் ஒன்றில் இருந்து 22 வயது இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 மணி அளவில் மீட்கப்பட்டள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் பேருந்து ஒன்றில் வந்து குறித்த குளத்தில் பாய்ந்தததை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் கண்டுள்ளார்.
இதை அடுத்து குறித்த நபர் கூச்சலிட்டதை தொடர்ந்து பிரதேச மக்கள் குறித்த இளைஞனை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் வட்டவலை கார்மென்ட் தோட்டப் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய தோமஸ் செபஸ்டியன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்தள்ளது.
சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வரவழைக்கபட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.