பாப் பாடகி அரியானா கிராண்டியை பாலியர் தொந்தரவு செய்த இளைஞர்
அமெரிக்காவில் விளம்பர நிகழ்ச்சியில் கலந்த கொண்ட் பாப் பாடகி அரியானா கிராண்டியை பாலியர் தொந்தரவு செய்த இளைஞர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டி ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அவர், அந்த திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற அந்த பிரம்மாண்ட விழாவில் மேடையில் ரசிகர்களை சந்தித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென பாதுகாப்பை மீறி மேடைக்கு ஏறி, அரியானா கிராண்டி மீது பாய்ந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து அரியானா கிராண்டியை பாதுகாப்பாக மாற்றி, குற்றச்சாட்டுக்கு உள்ளான இளைஞரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான்சன் வென் (26) என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், குற்றம் தீவிரமானது என்று கருதிய நீதிமன்றம் அவரை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்துவதும், மேலும் வாழ்நாள் முழுவதும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிப்பதும் குறித்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.