உல்லாச சவாரிக்காக தீயணைப்பு வாகனத்தை கடத்திய இளைஞர்கள்!
தீயணைப்பு வாகனமொன்றை உல்லாச சவாரிக்காக இளைஞர்கள் இருவர் கடத்திச் சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பக்கய் கிரசன்ட் எனும் குடியிருப்புப் பகுதியில் வீதியில் கைவிடப்பட்ட தீயணைப்பு வாகனமொன்று கிடப்பதாக நயாகரா ஃபோல்ஸ் நகர பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது முழு அளவிலான தீயணைப்பு வாகனமொன்று வீதியின் நடுவில் கிடந்தது.
அதிகாலை 1.30 மணியளவில் இளைஞர்கள் இருவர் மேற்படி வாகனத்திலிருந்து இறங்கி ஓடுவதை தாம் கண்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட தீயணைப்பு வாகனமொன்றே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் சேதமடைந்த நிலை யில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதை கடத்திச்சென்றவர்கள் யார் என்பது உடனடியாக தெரியவர வில்லை. இச்சம்பவம் குறித்து தாம் விசாரணை நடத்துவதாக நயா கரா ஃபோல்ஸ் நகர பொலிஸார் தெரிவித் துள்ளனர்.