11 வயது சிறுமியை காரில் கடத்தி மோசமாக நடக்க முயன்ற இளைஞன்! சாதுர்யமாக தப்பிய சிறுமி
அமெரிக்காவில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த 11 வயது சிறுமியை தனது காரில் கட்டாயப்படுத்தி கடத்தி சீரழிக்க முயன்ற 29 வயதான Raquan Folk என்ற அமெரிக்க இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறிப்பாக ஓரிடத்தில் காரை நிறுத்திய Raquan, அந்தச் சிறுமியிடம் ஆடைகளைக் களையச் சொல்லியிருக்கிறார். அவரது மோசமான நோக்கத்தைப் புரிந்துகொண்ட அந்தச் சிறுமி, சாதுர்யமாக தப்ப முயற்சித்துள்ளார்.
தன்னை சிறுநீர் கழிக்க அனுமதிக்கமுடியுமா என அவள் கேட்க, அருகிலுள்ள பெற்றோல் நிலையம் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றுள்ளார் Raquan.
காரிலிருந்து இறங்கிய அந்தச் சிறுமி, உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம், ஒருவர் தன்னைக் கடத்த முயல்வதாகக் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை புரிந்து கொண்ட Raquan அங்கிருந்து தப்பிச் சென்றாலும், கடந்த வியாழக்கிழமை பொலிஸார் அவரைப் மடக்கிபிடித்துள்ளனர்.
16 வயதுக்கு குறைவான சிறுமியை கடத்தியதால் Raquanக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது.