கனடாவில் போதை மருந்து பயன்படுத்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி
கனடாவில் போதை மருந்து பயன்படுத்திய இளைஞர்கள் சிலர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் வாட்டர்லூ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான போதை மருந்து உட்கொண்ட இளைஞர்கள் சிலர் நோய்வாய்ப்பட்டதனை தொடர்ந்து அவர்களை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வாட்டர்லூவின் பிஸ்சர் ஹால்மன் மற்றும் யுனிவர்சிட்டி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. என்ன வகை போதைப் பொருள் உட்கொண்டார்கள் என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
கஞ்சா அல்லது வேறும் போதை மாத்திரைகள் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
என்ன வகையான போதைப் பொருள் என்பது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.