யூடியூப் பார்த்து இந்திய வம்சாவளி குடும்பம் மேற்கொண்ட அசத்தல் செயல்!
யூடியூப் பார்த்து விமானம் ஒன்றை உருவாக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் அசத்தியுள்ளது.
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் யூரியூப் பார்த்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை உருவாக்கி பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அசத்தியுள்ளது.
இதேவேளை, பயிற்சி பெற்ற விமானியான அசோக் மற்றும் அவரது மனைவி அபிலாஷா இருவரும் விமானம் ஒன்றை வாங்க விரும்பியுள்ளனர். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற விமானத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை அடுத்து அவர்கள் இருவரும் தங்களுக்கு விருப்பமான வகையில் விமானத்தை தாங்களே உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் விமானத்திற்கான பாகங்களை தென் ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கியுள்ளனர்.
இதையடுத்து விமானம் தயாரிக்கும் வழிகாட்டுதல் கையேடு மற்றும் யூரியூப் காணொளிகளின் உதவியுடன் அசோக்கும் அவரது மனைவியும் தங்களது விருப்பத்திற்கேற்ற வகையில் 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.