கல்கரியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி
கல்கரியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வடமேற்கு கல்கரியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேறு எவருக்கும் காயங்களோ உயிர் அபத்தோ ஏற்படவில்லை தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்துச் சம்பவத்தில் 75 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் தீ விபத்து குறித்து குடியிருப்பாளர்கள் தீயணைப்பு படையினருக்கு அறிவித்துள்ளனர்.
என்ன காரணத்தினால் தீ விபத்து எற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும், இந்த தீ விபத்துச் சம்பவம் சந்தேகத்திற்கு இடமானது கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.