கனடாவில் வறிய குழந்தைகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள குழந்தைகளில் நான்கில் ஒருவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருவதாகவும், குடும்பங்களின் வருமானம் தொடர்ந்து சரிந்து வருவதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
'சோஷியல் பிளானிங் டொராண்டோ' என்ற இலாப நோக்கற்ற அமைப்பு, செவ்வாய்க்கிழமை அன்று 108 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
2023-ஆம் ஆண்டின் வரி செலுத்துவோர் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி, டொராண்டோவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வறுமை அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் டொராண்டோ மிக மோசமான நிலையில் உள்ளது.
இந்த அறிக்கையின் மூலம், கனடாவின் பெரிய நகரங்களிலேயே அதிகப்படியான குழந்தைகள் வறுமையைக் கொண்ட "குழந்தைகள் வறுமையின் தலைநகரம்" என்ற அவப்பெயரை டொராண்டோ பெற்றுள்ளது.
இதில் 23.6 சதவீதத்துடன் வின்னிபெக் நகரம் இரண்டாம் இடத்திலும், 21.7 சதவீதத்துடன் பீல் பிராந்தியம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
டொராண்டோவின் 25 வார்டுகளில் 18 வார்டுகளில் வறுமை விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்கார்பாரோ மற்றும் டவுன்டவுன் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.